சிஐடியு கட்சி சார்பில் கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கடலூர் பெருநகராட்சி நிர்வாகம் தமிழ்நாடு அரசு அறிவித்த கரோனா நிவாரணத்தொகை ரூ.3,000/-ஐ விடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும்.
கரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு அறிவித்த ரூ.10, 000/- கடன் தொகையை அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும்.
கணக்கெடுப்பின்படி விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும்.
சாலையோர வியாபாரிகள் பட்டியலில் உள்ள போலி வியாபாரிகளை நீக்க வேண்டும்.
உழவர் சந்தையை ஏற்கனவே செயல்பட்ட இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
குண்டும் குழியுமாக உள்ள கெடிலம் - கம்மியம்பேட்டை புறவழிச்சாலையை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.