உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநில தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில், கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதையடுத்து கடலூரில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 395ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து வைரஸ் தொற்று பாதிப்படைந்தவர்கள் அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுப்பிரியர்கள் மீது கிருமி நாசினி தெளித்த நகராட்சி நிர்வாகம்