தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 83ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆகவும் உள்ளது. மேலும் 1,019 பேர் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அதன்படி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாக் 10இல் 36 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயாளிகள், முதியோர்கள் ஆவார்கள். இந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து நோயாளிகள் காணொலியில் "கரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுவதில்லை. குடிக்க தண்ணீர் கூட இல்லை. தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சில நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் போதும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வருவதில்லை" எனத் தெரிவித்தனர்.
மேலும் இந்தக் காணொலியை பார்த்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கரோனா நோயாளிகள் குறித்த தகவல்களைப் பராமரிக்க உதவி மையங்கள்' - சென்னை மாநகராட்சி தகவல்