கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்ததாவது:
கடலூர் மாவட்டத்தில் மூன்று லட்சத்து பத்தாயிரம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 92 விழுக்காடு சிறு, குறு விவசாயிகள் ஆவர். நாம் வழக்கமாகப் பயிர்செய்யும் முறையினை மாற்றி நுகர்வோர், சந்தையில் என்ன தேவைப்படுகிறதோ அதை அறிந்து அதற்கேற்ப விவசாயம் செய்ய வேண்டும்.
விவசாயிகள் ஒன்றுசேர்ந்து சந்தையில் விரும்பப்படுகிற ஒரு பயிர் ரகத்தை அதிக பரப்பில் ஒரே சமயத்தில் பயிரிட்டு கூட்டாக விவசாயம் செய்து இடுபொருள்கள் வாங்குவதில் சிக்கனம் மேற்கொண்டு செலவினை குறைத்திடவும் நேரடியாகத் தொழிற்சாலைகளோடும், பெரும் நிறுவனங்களோடும் தொடர்புவைத்து நேரடி வணிகம் செய்ய முடியும்.
விலை நிர்ணயம்செய்யும் உரிமையை பெற இயலும். இதற்கு சிறந்த உதாரணமாக பல்லடம் பிராய்லர் கறிக்கோழி உற்பத்தியாளர்கள், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றைச் சொல்லலாம்
கடலூர் மாவட்டத்தில் 2017-18இல் வேளாண்மைத் துறை மூலம் 55 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத் துறை மூலம் 25 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டு ரூ. 4 கோடி மதிப்பில் டிராக்டர்கள் உள்பட இயந்திரங்கள் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதேபோன்று 2018-19இல் வேளாண்மைத் துறை மூலம் 60 உழவர் உற்பத்தியாளர் மக்களும் தோட்டக்கலைத் துறை மூலம் 25 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டு ரூ.4.25 கோடி மதிப்பில் டிராக்டர்கள் உள்பட இயந்திரங்கள் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நடப்பு 2019 - 20ஆம் ஆண்டு வேளாண்மைத் துறை மூலம் 62 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தோட்டக்கலைத் துறை மூலம் 25 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டு ரூ.4.35 கோடி மதிப்பிலான பண்ணை இயந்திரங்கள் வாங்குவதற்கு உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், பண்ணை இயந்திர நிறுவனங்கள் ஒருங்கிணைப்புக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தங்களுக்குத் தேவையான பண்ணை இயந்திரங்கள் மொத்தமாகக் குறைந்த விலையில் வாங்குவதற்கும், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பெறுவதற்கும் வித்தாக அமைக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க :பட்ஜெட்டில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை - எம்.பி. திருநாவுகரசர் அதிர
டி