கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறெதற்கும் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசியக் கடைகளை தவிர பிற கடைகளும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், கடலூரில் பெரியார் சிலை எதிரில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை திறந்து வைக்கப்பட்டு விற்பனை செய்து கொண்டிருப்பதாக கடலூர் தாசில்தார் செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தாசில்தார் செல்வகுமார் தலைமையில் துணை தாசில்தார்கள் மகேஷ், ராஜேஷ் பாபு, வருவாய் ஆய்வாளர் ரகுநாதன் ஆகியோர் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர், அத்தியவாசியக் கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மீறி விற்பனை செய்த கட்டுமானப் பொருள் கடைக்கு அலுவலர்கல் சீல் வைத்தனர். இந்நிலையில் அங்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: காற்றில் பறந்த 144 - இயல்புநிலைக்குத் திரும்பியது போல் உள்ள திருவாரூர்