ETV Bharat / state

மேகதாது அணை விவகாரம் - காங்கிரஸ் கண்டனம்

author img

By

Published : Jul 8, 2021, 8:37 AM IST

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம்
மேகதாது அணை விவகாரம்

கடலூர்: அதிமுக, பகுஜன் சமாஜ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியிலிருந்து விலகி 10க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜூலை 7) மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, "இலங்கை ராணுவத்தினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான முடிவு காண வேண்டும்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் செயல் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அமைச்சரிடம் பேசியுள்ளார்.

கே.எஸ் அழகிரி பேட்டி

பொருளாதாரம் தெரியவில்லை

முந்தைய மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக இருந்தபோது 70 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்பட்டது. ஆனால் இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலராக இருக்கும் நிலையில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது.

பொருளாதாரம் தெரியாத காரணத்தினால் ஏராளமான கலால் வரியை பெட்ரோல், டீசல் மீது ஒன்றிய அரசு விதிக்கிறது. நாடு வளமாக இருப்பதற்கு வரி விதிப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வரி விகிதாச்சார முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தெரிவிக்கிறது.

கருத்து கூற தேவையில்லை

மத்தியில் அமைச்சரவை விரிவாக்கம் இயல்பான ஒரு செயல், அந்தந்த மாநில தேர்தலுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார்.

பேட்டியின்போது கடலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திலகர், காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:மேகதாது அணை கட்டும் முயற்சி தடுக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.