ETV Bharat / state

நீர் தட்டுபாடு இல்லை என, பொய் அறிக்கை விடும் ஆட்சியர்! மக்கள் ஆவேசம்..! - tamilnadu water crisis

கடலூர்: குடிநீர் தட்டுப்பாடு இல்லை எனக் கூறும், மாவட்ட ஆட்சியரின் அறிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Jun 27, 2019, 10:22 PM IST

தமிழ்நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் அதற்குத் தப்பாத கடலூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விருத்தாசலம் திட்டக்குடி தாலுகாவில், குடிநீர் கேட்டு நாள்தோறும், பொதுமக்கள் சாலை மறியல், முற்றுகை, கண்டன ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அறவே இல்லை என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 34 கோடி ரூபாய் செலவில், 700க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாகப் பொதுமக்களுக்குத் தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரப்பகுதியில் உள்ள பெண்கள் தனியார் கொண்டு வரக்கூடிய குடிநீரைக் காசு கொடுத்து வாங்கும் அவல நிலையில் சிக்கித் தவிப்பதாகவும், கிராமப் பகுதி பெண்கள் கூலி வேலைக்குச் செல்ல முடியாமல், பிள்ளைகள் கல்வி பயிலப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், குடிநீர் தேடி காலி பாத்திரங்களுடன், பல கிமீ தூரம் அலைந்து திரிந்து நீரை எடுத்து வருவதாகச் சொல்லும் இவர்கள், அன்றாட அத்தியாவசிய தேவைக்கான நீரை, விளைநிலங்களில் பயிர்களுக்குப் பாய்ச்சும் நீரைப் பிடித்து வரக்கூடிய சூழலில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் இதையெல்லாம் அறியாத மாவட்ட ஆட்சியர், ஆளும் அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது, என சமூக நல ஆர்வலர்கள் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர்.

Intro:கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை மாவட்ட ஆட்சியர் அறிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் கண்டனம்.Body:கடலூர்
ஜூன் 27,

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் அதற்கு தப்பாத கடலூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக விருத்தாசலம் திட்டக்குடி தாலுகாவில் குடிநீர் கேட்டு நாள்தோறும் பொதுமக்கள் சாலை மறியல் முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரின்றி கடும் அவதிப்படும் நிலை தான் உள்ளது இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அறவே இல்லை என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதாவது கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 34 கோடி ரூபாய் செலவில் 700க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் இதன் காரணமாக பொதுமக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது நகரப்பகுதியில் உள்ள பெண்கள் தனியார் கொண்டு வரக்கூடிய குடிநீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலையில் சிக்கித் தவிப்பதாகவும் கிராமப் பகுதி பெண்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் பிள்ளைகள் கல்வி பயில பள்ளிக்கு செல்ல முடியாமல் குடிநீர் தேடி காலி குடம் மற்றும் பாத்திரம் பண்டங்கள் உடன் பல கிலோ மீட்டர் தூரம் அலைந்து திரிந்து அன்றாட அத்தியாவசிய தேவைக்கான நீரை விளைநிலங்களில் பயிர்களுக்கு பாய்ச்சும் நீரை பிடித்து வரக்கூடிய சூழலில் வாழ்ந்து வருவதாகவும் ஆனால் இதையெல்லாம் அறியாத மாவட்ட ஆட்சியர் ஆளும் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது தற்போது கண்டனத்துக்குரியது என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

தமிழகத்தை ஆளும் அக்கறை இல்லாத இந்த அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது இல்லவே இல்லை என கருத்து தெரிவித்த நிலையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படக்கூடிய அரசு அதிகாரியான மாவட்ட ஆட்சித்தலைவர் அமைச்சர்களுக்கு சற்றும் சலிக்காமல் பொய்யான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும் கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என அறிக்கை வெளியிட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவிக்கின்றனர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்களின் இந்த அறிக்கை கடலூர் மாவட்ட மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது

பேட்டி - 1- பாலு மக்கள் அதிகாரம்

2- திருமார்பன் வழக்கறிஞர் பொது நல அமைப்புConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.