ETV Bharat / state

வங்கிக்கடன் மானியத்திற்கான காசோலை: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கல்!

கடலூர்: மூன்று மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் வங்கிக்கடன் மானியத்திற்கான காசோலையை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வழங்கினார்.

வங்கிக்கடன் மானியத்திற்கான காசோலை
author img

By

Published : Jun 4, 2019, 10:28 AM IST

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றார்.

பொதுமக்கள் அளித்த இந்த மனுக்களைத் தீர ஆராய்ந்து கள ஆய்வு செய்தும் விதிமுறைகளுக்குட்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்குத் தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களைக் காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்கள் விரிவான பதில் அளிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வங்கிக்கடன் மானியத்திற்கான காசோலை
இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வங்கிக்கடன் மானியத்திற்கான காசோலையையும் ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 400 மதிப்பிலான கறுப்புக் கண்ணாடி, மடக்கு குச்சி ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன், தனித் துணை ஆட்சியர் பரிமளம், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Intro:3 மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கடன் மானியத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Body:கடலூர்
ஜூன் 3,

3 மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கடன் காசோலையை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இன்று வழங்கினார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி அன்புச்செல்வன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றார் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் அளித்த இந்த மனுக்களை தீர ஆராய்ந்து கள ஆய்வு செய்தும் விதிமுறைகளுக்குட்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்கள் விரிவான பதில் அளிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வங்கிக்கடன் மானியத்திற்கான காசோலையையும் ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 400 மதிப்பிலான கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு குச்சியையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன் தனித்துணை ஆட்சியர் பரிமளம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.