தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த டாக்ரோஸ் நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. இந்நிலையில், இரசாயன புகையுடன் நாள்தோறும் அல்லல்படும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இப்போரட்டத்தில், என்எல்சி சிஐடியூ தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிப்காட் சிஐடியு தலைவர் ஆளவந்தார், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.