தமிழ்நாடு அரசு அனைத்து முக்கிய நகரங்களுக்கும் குளிரூட்டப்பட்ட அரசுப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டம் சிதம்பரலிருந்து சென்னைக்கு இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா இன்று கடலூர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு குளிரூட்டப்பட்ட அரசுப் பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இப்பேருந்துகள் சிதம்பரத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வரை செல்லும் எனவும் காலை, மதியம், இரவு என மூன்று முறை இப்பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சம்பத், "உள்ளாட்சித் தேர்தலில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வகுத்துக் கொடுத்த திட்டப்படி செயல்பட்டு பெருவாரியான உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை பிடிப்போம். கடந்த தேர்தலைப்போலவே 99சதவீத இடங்களை அதிமுக கைப்பற்றும்" என்றார்.
இதையும் படிங்க: "விரைவில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் வரும்" - போக்குவரத்துத் துறை!