ETV Bharat / state

14 வயது சிறுமிக்கு திருமணம்...சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர் கைது... - District Social Welfare Officer

கடலூர் அருகே 14 வயது மகளை திருமணம் செய்து வைத்த, சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 22, 2022, 10:24 AM IST

கடலூர்: சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் தீட்சிதர் சோமசேகர். இவர் தன்னுடைய 14 வயது மகளை, தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை கடந்த ஆண்டு , அதே பகுதியை சேர்ந்த சக தீட்சியரின் 24 வயது மகனுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில் திருமணமான சிறுமி மற்றும் அவரது தந்தையை விசாரணைக்காக கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீசார் அழைத்து வந்தனர்.

அந்த சிறுமியை கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒப்புக் கொண்டார்.

இது பற்றி சமூக நல துறை மகளிர் ஊர் நல அலுவலர் தவமணி கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர் (46) கைது செய்யப்பட்டார்.

மேலும், திருமணம் செய்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்துக்கள் தொடர்பாக தான் பேசியது சரிதான்... ஆ.ராசாவுக்கு அண்ணாமலை கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.