ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் இடையே மீண்டும் மோதல்! - காமராஜர் அரசு மருத்துவமனை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதில், பாதிக்கப்பட்ட தீட்சிதர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் இடையே மீண்டும் மோதல்

author img

By

Published : Aug 9, 2022, 6:28 PM IST

உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில், கடந்த பிப்ரவரி மாதம் ஜெயசீலா என்ற பெண்ணை தீட்சிதர்கள் தாக்கியதாகவும், அவரது சாதியின் பெயரைச்சொல்லி பேசியதாகவும் சுமார் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இருந்தபோதிலும் அவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று(ஆக.08) இரவு தீட்சிதர்களுக்கான வட்ட கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. இதில் நடராஜர் தீட்சிதர் குடும்பத்தை ஆலயத்தில் அனுமதிக்கக்கூடாது என்றும், அவருடைய பணியை ஏலம் விட்டு வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நடராஜர் தீட்சிதர் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ’’வழக்கை வாபஸ் வாங்கினால் மட்டுமே உங்கள் குடும்பத்தை அனுமதிப்போம்’’ என்று கூறி நடராஜர் தீட்சிதரை குகேஷெ தீட்சிதர், சிவா தீட்சிதர், கெளரி தீட்சிதர், SNS சிவசங்கரன் தீட்சிதர், உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடராஜர் தீட்சிதர், சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இது சம்பந்தமாக சிதம்பரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடராஜர் தீட்சிதர் கூறுகையில், "கடந்த ஆறு மாதங்களாக வேலை இல்லாமல் குடும்பத்துடன் கஷ்டப்படுவதாகவும், நான் செய்ய வேண்டிய பணியை மற்றவர்களுக்கு ஏலம் விடக்கூடாது என கேட்டதற்கு, உனது தந்தை மற்றும் ஜெயசீலா கொடுத்த வழக்குகளை வாபஸ் வாங்கினால் மட்டுமே உனக்கு பணிகள் வழங்கப்படும்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் இடையே மீண்டும் மோதல்

இல்லையென்றால் மீண்டும் ஒரு ஆண்டுக்கு உனக்கு பணி வழங்க முடியாது எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு என்னை தாக்கினர். எனவே உடனடியாக குற்றவாளிகள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: இஸ்லாமியப்பெண்ணை தெய்வமாக வழிபடும் இந்துமக்கள்: இந்து - இஸ்லாமியர்களின் மதநல்லிணக்கவிழா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.