கடலூர்: சென்னையில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று, சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை செல்வதற்கு பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனையடுத்து பேருந்து தீ பற்றி எறிய தொடங்கியது. இதனால் பயணிகள் உடனடியாக பேருந்தை விட்டு இறங்கி ஓடினர், மேலும் அப்பகுதியில் நின்றவர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். தொடர்ந்து பேருந்து முழுவதும் தீப்பற்றி, எரிய தொடங்கியது. இதனால் சிதம்பரம் பேருந்து நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உரிய நேரத்தில் பயணிகள் இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிதம்பர நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிலிண்டரை சரியாக மூடாததால் ஏற்பட்டதா தீ விபத்து?