கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் பெரியசாமி (26). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு முன் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று (மே 18) அதிகாலை தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.
பள்ளியில் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பெரியசாமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கனேஷ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் பணிச்சுமை அல்லது குடும்பப் பிரச்சனை தற்கொலைக்கு காரணமா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. பெரியசாமி சடலம் உடற்கூராய்விற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் மகளின் சாவில் சந்தேகம் - கல்லூரி நிர்வாகத்தின் மீது பெற்றோர் புகார்