கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஓராண்டுக்கு முன் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டத் தொடங்கினார். கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கதிர்வேல், வீட்டு கட்டுமான பணி பாதியிலேயே நின்றது.
தங்க வீடு இல்லாத நிலையில், கதவு, இல்லாத வீட்டில் குடும்பத்துடன் குடியேறினார். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த நல்ல பாம்பு ஒன்று வீட்டில் வைத்திருந்த எல்.இ.டி. தொலைக்காட்சிப் பெட்டியின் பின்புறம் இருந்தது.
இதைப் பார்த்த கதிர்வேல் பாம்பு பிடிக்கும் சமூக செயற்பாட்டாளர் செல்லாவுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு வந்த செல்லா, பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து வனத் துறை உதவியுடன் காப்புக் காட்டில் விட்டனர்.
இதையும் படிங்க: 'சிறிய பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும்' ஆர்கே சுரேஷ்!