கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன் குப்பம் பகுதியில் திமுக எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்குப் பணிபுரிந்துவந்த தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கொலைசெய்யப்பட்டார். காவல் துறையினர் விசாரித்துவந்த இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில் திமுக எம்பி ரமேஷ், அவரது ஊழியர்கள் ஐந்து பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலைசெய்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் சரண்
ஊழியர்கள் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், ரமேஷ் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் (அக். 11) பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இரண்டு நாள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று (அக். 13) கடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சிபிசிஐடி காவல் துறையினர் ரமேஷிடம் விசாரணை நடத்த இரண்டு நாள் அனுமதி கேட்டிருந்தனர்.
சிபிசிஐடிக்கு ஒருநாள் அனுமதி
இதையடுத்து கடலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கினார். ரமேஷ் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: முந்திரி ஆலை தொழிலாளி கொலை: திமுக எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்