கடலூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் தங்களுடைய வாகனங்களை பதிவு செய்வதற்கும் நாள்தோறும் பலர் வந்து செல்வர். இந்நிலையில் இன்று காலை தனியார் ஓட்டுநர் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த கார் ஒன்று கேப்பர் மலைப்பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
அந்தக் காரை ஓட்டிவந்தவர் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற உள்ளே சென்றிருந்த நிலையில், கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு உள்ளவர்கள் வட்டார அலுவலகத்தில் உள்ள தீயணைப்புக் கருவிகள் மூலம் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.