ETV Bharat / state

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது! - Cannabis dealer arrested in kundass act

கடலூர்: தொடர்ந்து கஞ்சா விற்கும் குற்றத்தில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Cannabis dealer arrested in kundass act
Cannabis dealer arrested in kundass act
author img

By

Published : Mar 3, 2020, 11:25 PM IST

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் இளவழகி தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மாதா கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (41) என்பவரின் வீட்டைச் சோதனை செய்தனர். அப்போது, அங்கு சுமார் ஒன்னரை கிலோ கஞ்சா வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர் மீது ஏற்கனவே ஐந்து கஞ்சா வழக்குகள் உள்ளதால், அவரின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும்பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டார். அதன்படி, பாண்டியன் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் 12 லட்சம் கையாடல் செய்தவர் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கைது!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.