ETV Bharat / state

காழ்ப்புணர்ச்சியினால் சிலர் சனாதனத்தைப் பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளனர் - ஆளுநர் ஆர்.என். ரவி - பிரதமர் நரேந்திர மோடி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த யோகா தின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதன் பின்னர் வடலூர் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

கவர்னர் ஆர்.என்.ரவி
கவர்னர் ஆர்.என்.ரவி
author img

By

Published : Jun 22, 2023, 11:07 AM IST

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று(ஜூன் 21) நடந்த யோகா தின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதன்பின்னர், வடலூரில் நடந்த வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

தொடர்ந்து மாலை, வள்ளலார் வாழ்ந்த இடமான மருதூருக்குச் சென்றார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி வேட்டி, சட்டை அணிந்து தனது மனைவி லெட்சுமியுடன் வந்தார். அங்கு பள்ளி மாணவிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். மேலும் அவர், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று தமிழில் கூறி வழிபட்டார்.

பின்னர் அங்கிருந்து, வள்ளலார் தண்ணீரால் விளக்கை எரிய வைத்த இடமான கருங்குழிக்கும், அவர் சித்தி பெற்ற இடமான மேட்டுக்குப்பத்துக்கும் சென்றார். மேட்டுக்குப்பத்தில் உள்ள திருவறையில் தரிசனம் மேற்கொண்ட அவர், சிறிது நேரம் அங்கு தியானம் செய்தார். பின்னர் வடலூரில் உள்ள சத்திய ஞானசபைக்குச் சென்று, அங்குள்ள அணையா அடுப்பை பார்வையிட்டார். மேலும் அதில் விறகு ஒன்றையும் எடுத்துப் போட்டார். அன்னதானக் கூடத்தை பார்வையிட்ட பிறகு தர்மசாலையில் தரிசனம் செய்தார்.

தொடர்ந்து வடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி கே.என்.சி. மளிகை மோகனகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் சாது. ஜானகிராமன் வரவேற்றார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

தர்மம் செய்ய வேண்டும்: சனாதன தர்மத்தின் மாணவன் நான். வள்ளலார் குறித்த புத்தகத்தை நான் படிக்க, படிக்க பிரம்மிப்பு அடைந்தேன். சனாதன தர்மத்தின் 10ஆயிரம் ஆண்டுகளில் பாரம்பரியத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளல் பெருமான் ஆவார். காழ்ப்புணர்ச்சி, அறியாமை போன்ற காரணத்தினால் சனாதனத்தைப் பற்றி சில மனிதர்கள் தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர். சனாதன தர்மத்தை ரிஷிகள், முனிவர்களின் தத்துவங்கள், உபதேசங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். சனாதனத்தை ஒருவர் வெறுத்தாலும், அவர்களுக்குள்ளும் சனாதனம் இருக்கும் என்பதே சுருக்கமான உபதேசம் ஆகும்.

அனைத்து ஜீவராசிகளும் நோயற்று வாழ வேண்டும் என்பது தான் சனாதனம். அதனால் தான் வள்ளலார், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறுகிறார். ஒரு பயிர் வாடிப்போனதை எண்ணி அவர் தவிக்கும் தவிப்பு தெரிகிறது. எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் அதற்கு தீர்வு காண்பான் என்று நம்பிக்கை உள்ளது.

அப்படி 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தமிழ்நாட்டில் காரிருளை நீக்கி ஜோதியாக வந்தவர் தான் வள்ளல் பெருமான். 200 ஆண்டுகளுக்கு முன்பு நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. நாட்டை சுரண்டி விட்டனர். இந்த நாடு சுரண்டப்பட்டதால், பாரம்பரிய கல்வி, தொழில், விவசாயம், வலிமை என்று அனைத்தும் சீர்குலைந்து போய்விட்டது.

இதையும் படிங்க: ஆளுநரை தூக்கி எறியும் நாள் வெகு விரைவில் இல்லை - ஆ.ராசா ஆவேசம்

கல்வி, பொருளாதாரத்தை மட்டுமின்றி தனிமனித பெருமையையும் அவர்கள் சீர்குலைத்துவிட்டனர். ஆன்மிகத்தை நமது வரலாற்றை, இதயத்தில் இருந்து பிரித்து விட்டார்கள். அதேபோல் நமது இலக்கியத்தில் இருந்த ஆன்மிகத்தையும் பிரித்துவிட்டார்கள். எப்படி எல்லாம் சீர்குலைக்க வேண்டுமோ அப்படியெல்லாம் சீர்குலைத்துவிட்டனர். ஆன்மிகம் என்பது சோம்பேறிகளுக்கானது என்கிற தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்தி விட்டார்கள்.

நம்மிடையே பல்வேறு வழிபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருந்தோம். வெளிநாட்டில் இருந்து புதிதாக வந்த வழிபாட்டினால் தான் நம்மிடையே பிரச்னைகள் ஏற்பட்டது. அவர்களது வழிபாட்டை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவர்கள் நமது வழிபாட்டை பொய்யானது என்று கூறும் போது தான் பிரச்னைகள் ஏற்படுகிறது. குலதெய்வ வழிபாடு செய்து வந்தோம். அதை வெளிநாட்டு அறிஞர்கள் சிலர் மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் சிதைத்து விட்டனர்.

நம்முடைய சனாதன தர்மத்தை அழிக்க முற்பட்டபோது, அதை அழிக்க முடியாது என்று தெரிந்த பிறகு தான், தனி மனித மேன்மையை அழிக்க முற்பட்டார்கள். அதன் ஒரு பகுதியாக மொழி மாற்றம் என்ற பெயரில், நமது அடையாளத்தை அழித்து விட்டார்கள்.

இந்த உலகம் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது. பல்வேறு நாடுகளில் அணு ஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன. அதையெல்லாம் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒருசில நாடுகளில் உணவுகள் வீணடிக்கப்படுகிறது. ஒருசில நாடுகளில் ஒரு வேளை உணவு கூட இல்லாத நிலையில் ஏழைகள் உள்ளனர். இப்படி ஒரு உலகத்தை நீண்டகாலம் கொண்டு செல்லமுடியாது. இதில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும். நமது நாடு உயர்ந்த நாடாக உள்ளது. ஆன்மிகத்தில் உயர்ந்து இருக்கிறது.

கரோனா காலத்தில் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதை எவ்வளவுக்கு விற்கலாம் என்று வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்கள் எண்ணினார்கள். ஆனால், இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, 169 நாடுகளுக்கு இலவசமாக கொடுத்தோம். இதுதான் நமது பாரதிய சனாதன தர்மம்.

பாரதம் வலிமையாக இருக்க வேண்டும்: உலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், பாரதம் வலிமையாக இருக்க வேண்டும். ஒளிமயமான உலகத்துக்கு வழிகாட்டியாக நாம் இருக்கிறோம். இதேபோன்று பிரதமர் மோடி அமெரிக்காவில் (அதாவது நேற்று) பேசுகிறார். பிரதமர் மோடியின் பேச்சை உலகத் தலைவர்கள் எல்லாம் காது கொடுத்து கேட்கும் அளவுக்கு நாடு வலிமையாக உள்ளது'' என்றார்.

மேலும், விழாவில் சென்னை சிவலோக திருமடம் ஸ்ரீலஸ்ரீ வாதவூர் அடிகளார், ஜெயந்தி விழாக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், மாநில தலைவர் பிரபாகரன், திரு.வி.க. நகர் அருள்ஜோதி அன்னை ஆலய தனலட்சுமி, ஜெயந்தி விழாக்குழு மாநில செயலாளர் சுப்பிரமணியன், டி.ஆர்.எம். சாந்தி பர்னிச்சர்ஸ் ராஜமாரியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆளுநர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி.. - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.