ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி இஸ்லாமியர்கள் ஊர்வலம்! - caa protest at cuddalore

கடலூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 500 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்று கோஷம் எழுப்பினர்.

protest
இஸ்லாமியர்கள் ஊர்வலம்
author img

By

Published : Jan 6, 2020, 1:08 PM IST

ஈழத் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் புறக்கணித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியில் ஏராளமான பெண்கள், இஸ்லாமியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டம் நடத்தினர்.

பின்னர் பட்டாம்பாக்கம் பகுதியிலிருந்து பண்ருட்டி நோக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய பதாகைகள், கண்டன கோஷம் எழுப்பினர்.

இஸ்லாமியர்கள் ஊர்வலம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மறைகிறதா 'இரட்டை இலை’ மேஜிக்?

Intro:கடலூரில் குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 500 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டம்Body:மத்திய அரசு ஈழத் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் புறக்கணித்து கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கு ஆதரவு தெரிவித்த மாநில அரசை கண்டித்தும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கம் பகுதியில் ஏராளமான பெண்கள் முஸ்லிம்கள் முக்கியஸ்தர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் திரண்டனர் பின்னர் பட்டாம்பாக்கம் பகுதியிலிருந்து பண்ருட்டி நோக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது பெண்கள் குழந்தைகள் மாணவர்கள் பெரியவர்கள் என அனைவரும் கையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாளிகைமேடு சாலை அருகே சென்று திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

பேட்டி -முகமது யூசப் -
பேட்டி -ஜெயமூர்ததி -Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.