கடலூர்: கும்பகோணம் கோட்டப்பேருந்து, சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டது. பேருந்து சிதம்பரம் புறவழிச்சாலையில் ராஜா நகர் என்ற இடத்தில் செல்லும்பொழுது சாலை விரிவாக்கப்பணி நடைபெறும் வழியே சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசுப்பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் மனோகரன் (60), சீர்காழி தாலுகா திருநன்றியூர் பகுதியைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் ராமதாஸ் (39) உள்பட ஆறு பேர் பலத்த காயத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
மேலும் ஓட்டுநர், நடத்துநர் உட்பட மொத்தம் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. காயமடைந்தோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்வு!