கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய திருவிழாவான தேர் தரிசனத்திற்குப் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவித்தது.
தேர் வடம் பிடிக்கப் போராட்டம்
இதையடுத்து பக்தர்களுக்கு அனுமதி தரக் கோரி சிதம்பரம் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் கீழ சன்னதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று(டிச 17), மாவட்ட நிர்வாகம் ஆருத்ரா தேர் தரிசன விழாக்களுக்கு தடை விதித்து சிதம்பரம் ஆர்டிஓ ரவி தலைமையில் உத்தரவுப் பிறப்பித்த நிலையில் நாளை(டிச 19) நடைபெறும் தேர்த் திருவிழாவில் தேரை வடம் பிடித்து இழுக்க பக்தர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரி சிதம்பரம் நடராஜர் ஆலய தேர்முண்டி இருக்கும் கீழ சன்னதியில் தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:வள்ளுவர் கோட்டத்தில் குடிசைகள் அகற்றம்;பதற்றம்