ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தேரோட்டம்! - ஆருத்ரா தரிசன விழா

கடலூர்:  சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம் விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Arutra Darshan Festival
Arutra Darshan Festival
author img

By

Published : Jan 10, 2020, 10:20 AM IST

பூமியின் மையப்பகுதியாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி திருமஞ்சன விழாவும் முக்கியமானதாகும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும் நடைபெறுவது வழக்கம். ஆருத்ரா தரிசன திருவிழாவானது ஜனவரி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, நாள்தோறும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். நான்கு மாட வீதிகளையும் தேர் வலம் வர பக்தர்கள் நமச்சிவாயா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதை முன்னிட்டு பெண்கள் நான்கு மாட வீதிகளையும் மாகோலமிட்டு, நடனம் ஆடியபடி வந்தனர். தேர் நிலைக்கு வந்த உடன் நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, இன்று முதல் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் 2 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

ஆருத்ரா தரிசன விழாவை முன்னீட்டு தேரோட்டம்

இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு!

Intro:சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னீட்டு தேரோட்டம்Body:கடலூர்
ஜனவரி 9,

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விலங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னீட்டு தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பூமியின் மையப்பகுதியாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி திருமஞ்சன விழாவும் முக்கிய திருவிழாவாகும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும் நடைபெருவது வழக்கம் .ஆருத்ரா தரிசன திருவிழாவானது கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய திருவிழவான தேரோட்டம் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருளா தேரோட்டம் தொடங்கியது, தேர் 4 மாட வீதிகளையும் வலம் வர பக்தர்கள் நம்ச்சிவாய என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னீட்டு பெண்கள் நான்கு மாட வீதிகளையும் மாகோளமிட்டு, நடனம் ஆடியபடி வந்தனர். தேர் நிலைக்கு வந்த உடன் நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள அர்ச்சணைகள் நடைபெறும். தொடர்ந்து நாளை காலை முதல் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் 2 மணியளவில் ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறும். அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட சுவாமிகள் நடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இவ்விழாவை முன்னிட்டு காவல்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வன்னம் போக்குவரத்து போலிசார் வழிதடங்களை மாற்றி அமைத்துள்ளனர் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.