நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு நாளான நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடலூர்நாடாளுமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட பொறியாளர் கார்த்திக் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அன்புச்செல்வத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில்அமமுக வேட்பாளர் பொறியாளர் கார்த்திக் வேடப்புமனு நிராகரிக்கப்பட்டது.முன்மொழிந்தார்களில் பத்து பேரில் இரண்டு பேர் வாக்காளர் படிவத்தில் குளறுபடி உள்ளதாக கூறி நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாற்று வேட்பாளர் காசிதங்கவேல் மனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொறியாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு உரிய எழுத்து பூர்வமான விளக்கம் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலதை அமமுக முற்றுகையிட்டதால், காவல் துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.