ETV Bharat / state

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத் - பாமக

கடலூர்: மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என கடலூரில் நடைபெற்ற பரப்புரையின்போது தொழில் துறைஅமைச்சர் எம்.சி.சம்பத் விருப்பம் தெரிவித்துள்ளார்.

sampath
author img

By

Published : Mar 25, 2019, 1:08 PM IST

கடலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் கோவிந்தசாமி களமிறங்குகிறார். இதனையடுத்து விருத்தாசலத்தில்பாமக வேட்பாளர் கோவிந்தசாமி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கோவிந்தசாமி பேசுகையில், “நான் லஞ்சம் வாங்கமாட்டேன்- இனிவரும் காலங்களில் தேர்தலில் நிற்கவும் மாட்டேன். இதுதான் எனது கடைசித் தேர்தல். எனவே என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார்.

அதன்பிறகு பேசிய அமைச்சர் சம்பத், “அதிமுக கூட்டணிக் கட்சியினர் கடமை உணர்வோடு தேர்தல் களப்பணியாற்ற வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசு இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாட்டுக்குதேவையான திட்டங்களை கொண்டுவர முடியும்” என்றார்

இக்கூட்டத்தில் பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் அசோக்குமார், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் அருள்மொழி, மாநில மகளிர் அணி செயலாளர் தமிழரசி, மாவட்டச் செயலாளர் சுரேஷ், தேமுதிக மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Intro:விருத்தாசலத்தில் அதிமுக கூட்டணி கட்சி பாமக வேட்பாளர் கோவிந்தசாமி அறிமுகம் மற்றும் செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது

Body:கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒரு தனியார் மண்டபத்தில் விருதாச்சலம் சட்டசபை தொகுதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கினார்

இதில் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கோவிந்தசாமி பேசுகையில் நான் லஞ்சம் வாங்கமாட்டேன் இனிவரும் காலங்களில் தேர்தலில் நிற்க மாட்டேன் இது தான் எனது கடைசி தேர்தல் என்னை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்

இதில் அமைச்சர் தலைமை தாங்கி பேசுகையில் சட்டசபை அதிமுகவின் இரும்புக் கோட்டையாக உள்ளது அதிமுக கூட்டணி கட்சியினர் கடமை உணர்வோடு தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் மத்திய அரசுக்கு மாநில அரசு இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வர முடியும் என்றார்

கூட்டத்தில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அசோக்குமார் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் அருள்மொழி மாநில மகளிர் அணி செயலாளர் தமிழரசி மாவட்ட செயலாளர் சுரேஷ் தேமுதிக மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து பாஜக மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி அதிமுக நகர செயலாளர் சந்திரகுமார் ஒன்றிய செயலாளர் பழனிவேல் பாலதண்டாயுதபாணி பச்சமுத்து முன்னாள் சேர்மன் அருளழகன் சுந்தரராஜன் பாஸ்கர் எம்ஜிஆர் இளைஞர் ஆடி ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.