ETV Bharat / state

பேய் விரட்டுவதாக கூறி நகைகள் அபேஸ் - போலி சாமியார்கள் கைவரிசை

கடலூர்: பேய் விரட்டுவதாக கூறி விவசாயிடமிருந்து நகைகளை திருடிச் சென்ற சாமியர்களை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Fake Pretenders
author img

By

Published : Jul 28, 2019, 6:06 PM IST

Updated : Jul 28, 2019, 7:17 PM IST

கடலூர் மாவட்டம், அணுகம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (50). விவசாயியான இவரது வீட்டிற்கு வந்த சாமியார்கள் இருவர் வீட்டில் இருந்த வெங்கடேசனின் மகள் கல்விக்கரசியை பார்த்து பேய் பிடித்துள்ளது என்றும், பேயை விரட்ட சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அவர் போட்டுள்ள தங்க நகைகள், தாலி செயின் உள்ளிட்டவற்றை சுடுகாட்டில் வைத்து பூஜை செய்தால்தான் பேய் போகும் என தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய வெங்கடேசன் மகள் அணிருந்திருந்த நான்கு பவுன் தங்க நகைகளை சாமியார்களிடம் கொடுத்துள்ளார். அவர்களும் நகையை வாங்கி வெங்கடேசனை அழைத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். சுடுகாட்டிற்கு அருகே சென்றதும் இருவரும் அவரை வெளியில் நிற்க வைத்துவிட்டு பூஜை செய்துவிட்டு வருவதாக கூறியுள்ளனர்.

சுடுகாட்டிற்கு உள்ளே சென்றவர்கள் வெகுநேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த வெங்கடேசன் உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் நகைகளுடன் மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற போலிச் சாமியார்களை தேடிவருகின்றனர்.

கடலூரில் பேய் ஓட்டுவதாக கூறி விவசாயிடமிருந்து நகை அபேஸ் 
கடலூர் 
ஜூலை 28,

கடலூரில் பேய் விரட்டுவதாக கூறி விவசாயிடம் நகை பறித்த போலி சாமியார்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுகம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (50) விவசாயி. இவருடைய வீட்டிற்கு வந்த சாமியார்கள் இருவர் வீட்டில் உள்ள பெண்ணுக்கு பேய் பிடித்து உள்ளது அதை விரட்ட வேண்டும் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சாமியார்கள் வெங்கடேசனின் மகள் கல்விக்கரசியை பார்த்து இவருக்கு தான் பேய் பிடித்துள்ளது. மேலும் இவர் அணிந்திருக்கும் தாலிச் செயின் மற்றும் நகைகளை கழற்றிக் கொண்டு சுடுகாட்டில் வைத்து பூஜை செய்தால் பேய் போய்விடும் என கூறியுள்ளனர் இதனை நம்பி வெங்கடேசன் தனது மகள் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயின் மற்றும் தோடு ஆகியவற்றை கழற்றிக் சாமியாரிடம் கொடுத்துள்ளார். 

பின்னர் சாமியார்கள் தங்கள் கொண்டு வந்துள்ள மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் அழைத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் சென்று உள்ளனர் பின்னர் அங்கு சுடுகாட்டிற்கு வெளியே வெங்கடேசனை நிறுத்திவிட்டு சாமியார்கள் இருவரும் உள்ளே சென்று பூஜை செய்துவிட்டு உங்களை அழைக்கிறோம் என கூறியுள்ளனர். நீண்ட நேரமாகியும் சாமியார் வெளியே வராததை தொடர்ந்து சந்தேகமடைந்த வெங்கடேசன் சுடுகாட்டிற்குப் உள்ளே சென்று பார்த்தபோது சாமியார்கள் இருவரும் நகைகளை திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வெங்கடேசன் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயிடமிருந்து நகையை பறித்துச் சென்ற போலிச் சாமியார்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

*No photo*
Use any file photo
Last Updated : Jul 28, 2019, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.