ETV Bharat / state

வாட்ஸ்அப் வகுப்பு... அடுத்தக்கட்ட கல்விக்கான ஒரு தொடக்கம்: தனியார் பள்ளியின் அடடே முயற்சி!

தேர்வுக்குத் தயாராகும் 10ஆம் வகுப்பு மாணாக்கருக்குப் பயிற்றுவிக்கும் விதமாக தனியார் பள்ளி ஒன்று காணொலி வகுப்பின் மூலமாக ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்திவருகிறது. அதன்படி, கரும்பலகை இல்லாத ஆசிரியைகள் தங்கள் வீட்டின் கதவை கரும்பலகையாக்கி தனது இல்லத்தரசர்களின் உதவியோடு காணொலி எடுத்து கற்பிக்கிறார்கள். அதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு...

a-private-school-taken-class
a-private-school-taken-class
author img

By

Published : Apr 9, 2020, 11:41 AM IST

Updated : Jun 2, 2020, 3:04 PM IST

இதுவரை இவ்வுலகம் கண்டிராத புதிய வகை வைரசான கரோனா சுனாமியாக மாறி உயிர்களைக் காவு வாங்கிவருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் பொதுமக்கள் கொத்துக்கொத்தாகச் செத்து மடிந்த வண்ணம் உள்ளனர். இந்தப் பெருந்தொற்றைத் தடுப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு நாடும் விழிப்புடன் செயலாற்றி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி, பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் யாரும் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் சமூக இடைவெளியைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நமது நாட்டிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. கல்லூரிகள், பள்ளிகள் இயங்கவில்லை. பல கல்லூரிகளில் கடைசி ஆண்டு மாணாக்கர் புராஜெக்ட் எனப்படும் திட்ட செயல்முறையைக் காணொலி கலந்தாய்வு மூலமாக விரிவுரையாளர், பேராசிரியர்களின் உதவியுடன் செய்து வருகின்றனர்.

கடலூரில் தேர்வுக்குத் தயாராகும் 10ஆம் வகுப்பு மாணாக்கருக்கு எப்படியாவது பாடம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய முறையைக் கையாண்டு அதனைத் தற்போது செயல்படுத்தி வருகிறது தனியார் பள்ளி ஒன்று.

தனியார் பள்ளியின் காணொலி வகுப்பு

கரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பெருந்தொற்றின் பீதி தொடங்கியது முதலே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வீட்டில் உள்ள மாணாக்கர் பாடம் கற்கும் விதமாக கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாட்ஸ்அப் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றது. வீட்டில் உள்ள மாணாக்கருக்கு எளிதில் புரியும்படி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பாடத்தை நடத்தி அதனை வாட்ஸ்அப் மூலமாக அவர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

இதற்கென ஒவ்வொரு பாடம் சம்பந்தமாக தனித்தனி வாட்ஸ்அப் குழுக்களை பள்ளி நிர்வாகத்தினர் உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் அந்த வாட்ஸ்அப் குழுவில் உள்ள ஆசிரியர் தனது மாணாக்கருக்கு பாடம் நடத்தி அதை அக்குழுவில் பதிவு செய்கிறார்.

அதைப் பார்த்து மாணாக்கர் கல்வி கற்கின்றனர். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அந்த வாட்ஸ்அப் குழுவிலேயே சந்தேகம் கேட்கின்றனர். அதற்கு உடனடியாக ஆசிரியர்களும் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக பதிலளிக்கின்றனர்.

வாட்ஸ்அப் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

வீட்டுக் கதவும்... வாட்ஸ்அப்பும்...

வீட்டில் கரும்பலகை இல்லாத ஆசிரியர்கள் தங்களது வீட்டுக் கதவை கரும்பலகையாக மாற்றி அதில் எழுதி அதனை மாணவர்களுக்குப் புரியும்படி விளக்குகின்றனர். ஆசிரியைகளுக்கு உதவியாக அவரது கணவர்கள் காணொலி எடுக்க உதவி செய்கின்றனர். தற்போது வீட்டிலேயே அடைந்திருக்கும் மாணவர்கள் விளையாடக்கூட வெளியில் செல்ல முடியாத ஒரு நிலை இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் வீட்டில் நேரம் கிடைக்கும்போது இதுபோன்ற பாடத்தினைப் பார்த்து அதனைத் தெரிந்து கொள்ளலாம் எனக் கல்வியாளர் ஆயிஷா நடராஜன் தெரிவித்தார்.

இதுபோன்ற பாடம் நடத்துவதை வீட்டிலிருக்கும் பெற்றோரும் கவனித்து மாணாக்கருக்குச் சொல்லித் தருவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இது அடுத்தக்கட்ட கல்விக்கான ஒரு தொடக்கம் எனவும் அவர் கூறினார்.

Last Updated : Jun 2, 2020, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.