ETV Bharat / state

கள்ளக்காதலனை அடித்து கொலை செய்த பெண்! - murder

கடலூர்: வடலூர் அருகே தனது தாயாரிடம் தவறாக நடக்க முயன்ற கள்ளக்காதலனை அடித்து கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசிய கள்ளக்காதலியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளகாதலன் கொலை
author img

By

Published : Mar 28, 2019, 9:33 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அய்யாபிள்ளை என்கிற பூராசாமியும் (39), பரிமளா (40) என்னும் பெண்ணும் ஒரே பகுதியில் வசித்து வந்தனர். இதில் பரிமளா, கணவரை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரே பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனிடையே வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அய்யாபிள்ளை மார்ச் 9ஆம் தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது பரிமளாவை தேடி அவரது வீட்டிற்கு சென்ற அய்யாபிள்ளை, அவர் இல்லாத காரணத்தினால் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பரிமளா கடலூர் மாவட்டம் வடலூரிலுள்ள ஆர் கே நகர் பகுதியில் இருப்பதாக கூறியதையடுத்து, மார்ச் 13 ஆம் தேதி அவரை நேரில் சென்று பார்த்துள்ளார். இதன்பிறகு அய்யாபிள்ளை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பரிமளா, அய்யாபிள்ளையை கழிவுநீர் தொட்டியில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பரிமளாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குடிபோதையில் இருந்த அய்யாபிள்ளை பரிமளாவிற்கு பதிலாக அவரது தாயிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இதனால் பரிமளா அய்யாபிள்ளையை கீழே தள்ளி கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் அய்யாபிள்ளையின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக் காதலனை அடித்து கொலை செய்து செப்டிக் டேங்க் வீசிய கள்ளக்காதலி 

கடலூர்
மார்ச்சு 28,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் அய்யாபிள்ளை என்கின்ற பூரா சாமி (39). அதே பகுதியைச் சேர்ந்த பரிமளா (40) கணவரைப் பிரிந்து தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அய்யாபிள்ளை கடந்த 9ஆம் தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் பின்னர் அவர் பரிமளாவை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் ஆனால் அங்கு அவர் இல்லை. உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்ட அய்யாபிள்ளை கடலூர் மாவட்டம் வடலூரில் ஆர் கே நகர் பகுதியில் வசித்து வந்துள்ள பரிமளாவை  மார்ச் 13ஆம் தேதி நேரில் சென்று பார்த்துள்ளார்.

வடலூருக்கு சென்று வருவதாக  உறவினர்களிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட அய்யாபிள்ளை பின்னர் வீட்டிற்கு வரவில்லை இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

 இது தொடர்பாக வடலூர் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் வடலூருக்கு குடிபோதையில் வந்த அய்யாப்பிள்ளை பரிமளாவின் வீட்டிற்குச் சென்று பரிமளா என்று நினைத்து அவருடைய தாயுடன் உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த பரிமளாவின் தாய் அவரிடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டுள்ளார்.

கூச்சல் சத்தம் கேட்டு வந்த பரிமளா தாயைக் காப்பாற்றுவதற்காக அய்யா பிள்ளையே கீழே தள்ளியுள்ளார் இதனால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் பின்னர் அவரது உடலை அருகில் உள்ள செப்டிக் டாங்கில் போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் பரிமளா வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்கை திறந்து பார்த்த போது அழுகிய நிலையில்  அய்யாப்பிள்ளையின்  உடல் கிடைத்துள்ளது பின்னர் அவரது உடலை பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Video send ftp 
file name: TN_CDL_01_28_VADALUR_MURDERED_7204906
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.