கடலூர்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்துவருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.
கடலூர் மாவட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் உழவர்கள் நெல் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் ஐந்தாயிரத்து 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. சில இடங்களில் உழவர்கள் நீரை வடியவைத்து-வருகின்றனர். ஆனால் தாழ்வான இடங்களில் உள்ள வயல்களில் நீரை வடியவைக்க முடியாமல் உள்ளது.
இதனால் வேளாண்மை அலுவலர்கள் உடனடியாகச் சேதமடைந்த நெற்பயிர்களைக் கணக்கெடுக்க வேண்டும் என உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சேர்ந்து உழைப்போம் - முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ட்வீட்