கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் சார்பில் 40ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று (மார்ச் 11) இரவு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ”நமது கலாசாரம் பண்பாடு, காப்பாற்றப்படுவதற்கு இதுப்போன்ற நிகழ்ச்சிகள்தான் காரணம். நமது கலாசாரம் உலகிலேயே மிகச்சிறந்த கலாசாரம். அந்த காலத்தில் அரசவையில் இத்தகைய நடனங்கள், பாடல்கள் ஒரு அங்கமாகவே இருந்தது. நாட்டை ஆளும் அரசர்கள் கலை உணர்வோடு இருக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இதைவிட சிறப்பாக நீங்கள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். கலை வளர வேண்டும். என சிதம்பரம் நடராஜரை வேண்டுகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: