உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் வகையில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் கடலூரில், நேற்று (ஆக. 12) வரை கரோனா தொற்றால் மொத்தம் ஐந்தாயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று (ஆக. 13) மேலும் 258 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 944ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் இரண்டாயிரத்து 484 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேற்று வரை மொத்தம் மூன்றாயிரத்து 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 93 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று சிகிச்சைப் பலனின்றி நான்கு பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தம் 74ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் இன்று 131 பேருக்கு கரோனா