மக்களவைத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தேர்தல் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
பின்னர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய குடிமக்களாகிய நாம் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களில் மாண்பை நேரில் நிறுத்தி மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் 100 விழுக்காடு வாக்களிக்க விழிப்புணர்வு மேற்கொள்வோம் என உறுதிமொழி எடுத்தனர்.