ETV Bharat / state

போனா வராது பொழுது போனா கிடைக்காது! - வெங்காயம் வாங்க திரண்ட மக்கள் - கடலூர் பான்பரி மார்க்கெட்

கடலூர்: ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்துக்கொண்டு வெங்காயம் வாங்கிச் சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

cuddalore-market
cuddalore-market
author img

By

Published : Dec 10, 2019, 3:32 PM IST

நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் ஆம்லெட் உள்ளிட்ட உணவு வகைகளின் விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெங்காயம் கிடைக்காமல் வியாபாரிகள் அவதியடைந்து வரும் நிலையில், கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் போடப்பட்டுள்ள விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளது.

cuddalore-market
வெங்காயம் வாங்க திரண்ட மக்கள்

4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த கடை உரிமையாளரிடம் சென்று இது உண்மைதானா?, 100 ரூபாய் கொடுத்தால் 4 கிலோ வெங்காயம் கிடைக்குமா என்று அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டனர். அதற்கு கடை உரிமையாளர் பலகையில் எழுதி இருப்பது போல் 4 கிலோ வெங்காயம் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது உண்மை என்றும், 1 கிலோ வெங்காயம் 25 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவல் கடலூர் நகர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து, காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்துக்கொண்டு, வெங்காயத்தை வாங்கிச் சென்றதைக் காணமுடிந்தது.

வெங்காயம் வாங்க திரண்ட மக்கள்

இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதன் விளைவாக வரலாறு காணாத அளவில் விலை ஏறியது. இதன் காரணமாக எங்களுக்கு தினந்தோறும் குறைந்த அளவு வெங்காயம் வந்து கொண்டிருந்தது. மேலும் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவே வெங்காயம் வாங்கிச் சென்றனர்.

இன்று காலை பெங்களூரு பகுதியிலிருந்து இரண்டு லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது. பெங்களூருவில் இருந்து தாங்கள் எந்த தொகைக்கு கொள்முதல் செய்திருக்கிறோமோ அதே தொகைக்கு விற்பனை செய்கிறோம் என்றும் பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க...

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகனிடம் ரூ.8 லட்சம் மோசடி!

Intro:கடலூரில் பரபரப்பு..

1 கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை.

பொதுமக்கள் வியாபாரிகள் முண்டியடித்துக்கொண்டு வெங்காயம் வாங்கி சென்றனர்.Body:நாடு முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் பெரும் பாதிப்படைந்து வந்தனர். மேலும் ஹோட்டல்களில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்வு ஏற்பட்டதால் ஆம்லெட் உள்ளிட்ட உணவு வகைகள் விலை அதிகரித்து விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெங்காயம் கிடைக்காமல் வியாபாரிகள் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் விலைப்பட்டியல் போடப்பட்டு உள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என எழுதப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த கடை உரிமையாளரிடம் சென்று இந்த விலை உண்மையா? நாங்களும் 100 ரூபாய் கொடுத்தால் 4 கிலோ வெங்காயம் கிடைக்குமா என்பதனை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டனர். அப்போது கடை உரிமையாளர் பலகையில் எழுதி இருப்பது போல் 4 கிலோ வெங்காயம் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிலோ வெங்காயம் 25 ரூ முதல் 60 ரூபாய் வரை விற்பனை என ஆகையால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார். இந்த தகவல் கடலூர் நகர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. மேலும் காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்து வெங்காயத்தை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது. இந்த நிலையில் இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, நாடு முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணமாக வரலாறு காணாத அளவில் வெங்காயம் விலை ஏறியது. இதன் காரணமாக எங்களுக்கு தினந்தோறும் குறைந்த அளவு வெங்காயம் வந்து கொண்டிருந்தது. மேலும் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவே வெங்காயம் வாங்கி சென்றனர். இந்த நிலையில் இன்று காலை பெங்களூர் பகுதியிலிருந்து இரண்டு லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது. இவர்கள் பெங்களூரில் இருந்து அனுப்பிய மொத்த வியாபாரி தெரிவித்த தொகையான 4 கிலோ வெங்காயம் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம். மேலும் பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் என சொல்லக்கூடிய சின்னவெங்காயம் 140 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம். காலை முதல் 4 கிலோ 100 ரூபாய் என தெரிவித்த முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வத்துடன் கட்டுக்கடங்காத கூட்டமாக வந்து வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் எங்களுக்கு வழங்கக்கூடிய வெங்காய விலையை தான் நாங்கள் பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றோம் என கூறினார்

பேட்டி -பக்ரான் -உரிமையாளர்
பேட்டி -ஜோதி -மக்கள்
பேட்டி -செல்வி -மக்கள். கடலூர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.