கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் கிராமத்தில் வினோபா நகர் பகுதி இளைஞர்களே முன்வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
வினோபா நகர் எல்லையில் தடுப்புகளை அமைத்து வெளியாட்களை கிராமத்துக்குள் நுழைவதை தடுத்து நிறுத்துகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வரும் கிராமவாசிகளின் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கின்றனர். மேலும் ஆட்களின் கைகளை சுத்தமாக கழுவிய பின்னர் கிராமத்துக்குள் அனுமதிக்கின்றனர்.
மேலும் கிராமத்தில் காய்ச்சல் சளி உள்ளிட்டவை உள்ள நபர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் ஊர் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இப்பணிகளை செய்துவருவதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர். கிராமத்தில் ஆங்காங்கே வேப்பிலை கட்டி மஞ்சள் தண்ணீர் தெளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசு மேற்கொண்ட சரியான நடவடிக்கை - ராகுல் காந்தி