கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசம்பாளையம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராகுல்காந்தி (25). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ராமம்பாளைத்தில் நடக்கவிருந்த அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது ராமம்பாளையம் நுழைவுவாயில் அருகில் தாழ்வான பகுதியில் சென்ற உயர் மின் அழுத்த ஒயரில் ராகுல்காந்தி கையில் வைத்திருந்த இரும்பு பைப் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ராகுல்காந்தி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அருகிலிருந்த சக தொழிலாளர்கள் ராகுல்காந்தியை காரமடையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்தவர்கள் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ராகுல்காந்தி உடல் உடற்கூராய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் திருடும்போது தீ விபத்து: இளைஞர் காயம்