பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டட தொழிலாளியான இவர் நேற்று (செப்.28) மதியம் ஆனைமலை ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஆற்றில் எதிர்பாராதவிதமாக மணிகண்டன் தவறி விழுந்தார். இதையடுத்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் ஆனைமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த மணிகண்டனின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் சுப்பிரமணியம் கூறுகையில், ”ஆனைமலை ஆற்றில் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு சென்று குளிக்கச் செல்ல வேண்டும். ஆற்றில் சேறு நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து ஆனைமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!