ETV Bharat / state

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது! - two person arrested pokcho in pollachi

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர், பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் என இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

bosco
bosco
author img

By

Published : Jul 15, 2020, 10:35 AM IST

Updated : Jul 15, 2020, 10:44 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த போடிபாளையம் பகுதியில் பாபு என்ற இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர் யாரும் இல்லாத விநாயகர் கோயிலுக்கு அச்சிறுமியை அழைத்துச் சென்று, ரகசியமாக தாலி கட்டிவிட்டு, அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். அதைத் தொடர்ந்து அச்சிறுமியை இளைஞர் கர்ப்பமாக்கியுள்ளார்.

நாளடைவில் மாணவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தாயார், இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, பாபு என்ற இளைஞர் தன்னை கட்டாயப்படுத்தி ரகசியத் திருமணம் செய்ததாகவும், யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் இச்சைக்கு ஆளாக்கியதால், தான் கர்ப்பமடைந்ததாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இது குறித்து பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.

போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாபு

அதேபோல், சின்னவதம் பச்சேரியில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பக்கத்து வீட்டில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாட சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த குழந்தையின் தந்தை ராஜா, குழந்தைகள் பாத்ரூம் செல்வதாகக் கூறி சென்ற நேரத்தில், பக்கத்து வீட்டு சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

பின்னர் இது குறித்து சிறுமி தன்னுடைய தாயாரிடம் கூறியதையடுத்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ராஜா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜா
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜா

இதையும் படிங்க:பெண்களிடம் கூட்டுப் பாலியல் கொடுமை: காணொலி எடுத்து பணம் பறித்து வந்த கும்பல் கைது!

Last Updated : Jul 15, 2020, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.