ETV Bharat / state

17 வயது சிறுமியை மணந்த இளைஞர்: பாய்ந்த போக்சோ சட்டம்! - love marriage

17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Pocso  போக்சோ சட்டம்  கோயம்புத்தூர் செய்திகள்  குற்றச் செய்திகள்  பாலியல் வன்புணர்வு  பாலியல் வழக்கு  Pocso act  coimbatore news  coimbatore latest news  crime news  sexual harassment  child marriage  coimbatore youth arrested for child marriage  youth arrested in pocso act for married a 17 years girl  காதல்  திருமணம்  elopement  love marriage  காதல் திருமணம்
17 வயது சிறுமியை மணந்த இளைஞர்...
author img

By

Published : Jun 20, 2021, 12:54 PM IST

கோயம்புத்தூர்: மதுரை மாவட்டம், திருமங்களம் பகுதியைச் சேர்ந்த ராமசந்திரனும் (22), அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் குடும்பத்தார் கோயம்புத்தூரில் குடிபெயர்ந்து உள்ளனர். இதனால் சிறுமியைக் காண்பதற்காக கோயம்புத்தூர் சென்ற ராமசந்திரன், சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து இருவரும் கோயம்புத்தூரிலேயே வேறொரு இடத்தில் தங்கியுள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் காவல் துறையினர் ராமச்சந்திரனை கைது செய்தனர்.

பின் ராமசந்திரன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இதையடுத்து சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: 'வீட்டிலிருந்தே வருமானம்' - விளம்பரத்தை நம்பி வில்லங்கத்தில் சிக்கிய நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.