திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் தற்போது திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
சமீபத்தில் கொடைக்கானலில் தன்னுடன் பள்ளியில் படித்த பெண்ணை பார்த்துள்ளார். அப்போது பெண்ணிடம் கல்லூரி படித்துக்கொண்டே சூலூரில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் இருவரும் தங்களின் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்ட நிலையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. அஜித்குமாரின் பேச்சை நம்பி, மாணவி தன்னுடைய நிர்வாண புகைபடங்களை அனுப்பியுள்ளார்.
மேலும் வீடியோ கால் மூலம் மாணவியின் நிர்வான வீடியோவையும் அஜித்குமார் தன்னுடைய செல்லில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அஜித்குமாரின் நடவடிக்கை பிடிக்காமல் போகவே மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அஜித்குமார் கேட்க, அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகின்றது. இதனையடுத்து மாணவியின் ஆபாச புகைபடம், வீடியோ ஆகியவற்றை அஜித்குமார் முகநூலில் பதிவேற்றம் செய்தார்.
இது குறித்து மாணவி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் அஜித்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் புகார் தொடர்பான ஆபாசப் படங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் மீது காவல்துறையினர் ஏமாற்றுதல், கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: வீட்டு முற்றத்தில் விளையாடிய சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு வலை.!