ETV Bharat / state

நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய வேன்; இளைஞர் உயிரிழப்பு

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே துறையூர் மேட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

youngster died in van accident in Pollachi

author img

By

Published : Sep 8, 2020, 4:25 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள துரையூர் மேட்டில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது காமநாயக்கன்பாளையம் தனியார் பனியன் கம்பெனிக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் வேன் லாரி மீது மோதியதில் வேனில் இடதுபுறமாக முன் இருக்கையில் அமர்ந்திருந்த அங்கலக்குறிச்சி சேர்ந்த சக்தி மகன் ரஞ்சித் குமார் (27) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இவருடன் பயணம் செய்த இரு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேனை ஓட்டி வந்த தென்சங்கம்பாளையதை சேர்ந்த பரமசிவம் மகன் கார்த்திக் பிரபு (29) சிறிய காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ரஞ்சித்குமாரை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆழியார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.