ETV Bharat / state

மளிகைக் கடையில் திருடிய இளைஞர்கள் - 24 மணி நேரத்தில் பிடிக்க உதவிய சிசிடிவி - மளிகை கடையில் திருடிய இளைஞர்கள் கைது

கோவை: குனியமுத்தூர் பகுதியில் உள்ள மளிகை கடையில் திருடிய இளைஞர்களை சிசிடிவி உதவியினால் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மளிகை கடையில் திருடும் இளைஞர்கள்
author img

By

Published : Nov 23, 2019, 10:44 AM IST

Updated : Nov 23, 2019, 12:32 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி முத்துகிருஷ்ணன் கடையை மூடிவிட்டு சொந்த ஊரான தூத்துக்குடியில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். பின்னர் திருவிழாவை முடித்துக் கொண்டு நேற்று மீண்டும் குனியமுத்தூர் பகுதிக்கு வந்து கடையை திறக்க முற்பட்டபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூ.20ஆயிரம் ரொக்கம், எல்.இ.டிவி உள்ளிட்டவைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் , கடைக்கு வந்து அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போது, இரு இளைஞர்கள் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபடுவது பதிவாகியிருந்தது.

மளிகை கடையில் திருடும் இளைஞர்கள்

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர் அந்த காட்சிகளை வைத்துவிசாரித்தில், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஜாபர் அலி, அபிஷேக் ஆகிய இருவரும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: குட்டையில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் டிக்டாக் வீடியோ

Intro:கோவை குனியமுத்தூர் பகுதியில் மளிகை கடையில் திருடும் இளைஞர்கள்.சிசிடிவி காட்சிகள்...Body: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் கோவை குனியமுத்தூர் மகாலட்சுமி நகர் பகுதியில் 15 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி கடையை மூடிவிட்டு சென்றவர் சொந்த ஊரான தூத்துக்குடியிலுள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டார்.இந்நிலையில் நேற்று மதியம் கோவைக்கு திரும்பிய நிலையில் வழக்கம் போல் கடையை திறக்க சென்றுள்ளார்.அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைத்தார்.மேலும் கடையினுள் வைக்கட்டிருந்த இருபதாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சிசிடிவியின் எல்.சி.டி உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரிளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் கடையினுள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.அதில் இரு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதுடன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெளிவாக பதிவாகி இருந்தது.மேலும் சிசிடிவி காமிராவை பார்க்கும் அந்த வாலிபர் செய்வதறியாது சிசிடிவின் டி.வி.ஆர்க்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்துடன்,சிசிடிவி காண்பதற்காக பயன்படுப்படும் எல்.சி.டி.யை திருடிச் சென்றார்.இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த. ஜாபர் அலி மற்றும் அபிஷேக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையலடைத்தனர். புகாரளிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த குனியமுத்தூர் போலீசாருக்கு அப்பகுதியினர் மத்தியில் பாராட்டு குவிந்துவருகிறது..Conclusion:
Last Updated : Nov 23, 2019, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.