கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் அரசு அலுவலர்களுக்கான சிறப்பு யோகா வகுப்பு ஜனவரி 25ஆம் தேதிமுதல் 29ஆம் தேதிவரை நடைபெற்றது. இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எஃப்.எஸ். அலுவலர்கள் உள்பட 88 அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசுப் பணியாளர்கள், பயிற்சித் துறையில் பணியாற்றும் அலுவலர்களின் திறன் மேம்பாட்டிற்காக இந்திய மற்றும் சர்வதேச பயிற்சி மையங்களால் நடத்தப்படும் பல பயிற்சிகளை ஈஷா யோகா பயிற்சி மையம் வழங்குகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான ஐந்து நாள்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அலுவலர்களுக்கு ‘ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா’ என்ற யோகா பயிற்சி வழங்கப்பட்டது. அத்துடன் உடல், மனநலனை மேம்படுத்துவதற்கான எளிமையான யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
மேலும் சத்குருவுடனான தியான அமர்வுகளிலும், கலந்துரையாடல் நிகழ்விலும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும், அவர்கள் இவ்வகுப்பில் வழங்கப்பட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவருவதன் மூலம் நீண்ட நாள்களாக அவர்கள் சந்தித்துவரும் உடல், மன ரீதியான பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'அரசியலில் லாலி பாப் பேபி ஸ்டாலின் தான்' - அமைச்சர் ஜெயகுமார்