கடந்த நான்காம் தேதி வீட்டை விட்டுச் சென்ற தனது 16 வயது மகளை காணவில்லை என்று அவரது தந்தை பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் குமரன் நகரைச் சேர்ந்த அமானுல்லா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அமானுல்லா என்பவர் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை அவரது நண்பர்களிடம் சொல்லி அவர்களிடமும் மாணவியை வன்கொடுமை செய்ய வற்புறுத்தி, அந்த பத்து பேரும் பல மாதங்களாக அந்த சிறுமியை மிரட்டி தங்கள் இச்சைக்கு உள்ளாக்கியதும் தெரியவந்தது.
மேலும், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த 16 வயது சிறுமி வேறு இரண்டு இளைஞர்களுடன் பொள்ளாச்சி ஆழியாறு சாலையில் காரில் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் காவலர்கள் தீவிரமாகினர். சிறுமியின் தொலைப்பேசி எண்ணிற்கு வந்த அழைப்புகளை வைத்துச் சுதாரித்துக் கொண்ட கடத்தல்காரர்கள, அவரைி ஆழியாறு சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாகப் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த பகவதி (26), முகமது அலி (28), டேவிட் செந்தில் (30), முகமது ரபிக் (28), அருண் நேரு (28), சையத் முகமது (25), இர்ஷாத் முகமது (28), இர்ஷாத் பாஷா (28) உள்ளிட்டோரை இரண்டு தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்த நிலையில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில், பிரபு என்பவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.