ETV Bharat / state

'கருணையே இல்லையா?' கோவிட் பணியில் உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்! - DR VIVEKANANDAN DEATH

கரோனா பணியில் உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு அவரது 4ம் ஆண்டு நினைவுத் தினத்திலாவது அரசு வேலை வழங்க வேண்டும் என அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், அரசு மருத்துவர்கள் குழு
முதல்வர் ஸ்டாலின், அரசு மருத்துவர்கள் குழு (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 11:21 AM IST

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் மருத்துவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்து முக ஸ்டாலின் போராட்டக் களத்திற்கே சென்று மருத்துவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், திமுக ஆட்சி அமைந்த உடன் அவர்களின் காேரிக்கை நிறைவேற்றப்படும் என கூறியிருந்தார்.

மருத்துவர் விவேகானந்தன் மரணம்: அரசு மருத்துவர்களின் முக்கியமான கோரிக்கையாக ''முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அரசாணை 356 அமல்படுத்த வேண்டும், PAY BAND 4 வழங்க வேண்டும்'' போன்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடினர். அப்போது போராட்டக் களத்தில் தீவிரமாக மருத்துவர் விவேகானந்தனும் போராட்டத்தில் ஈடுப்பட்டு இருந்தார். அதன் பின்னர் கரோனா காலகட்டத்தில் பணியில் இருந்தபோது மருத்துவர் விவேகானந்தன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு அவரது 4ம் ஆண்டு நினைவுத் தினத்திலாவது அரசு வேலை வழங்க வேண்டும் என அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: "பெண் யானைகளிடம் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டால் தாக்கக்கூடும்"- கால்நடை மருத்துவர்கள் தரும் விளக்கம்!

இதுகுறித்து அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை கூறும்போது, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற போது கரோனா தொற்றின் உச்சத்தால், அசாதாரண சூழ்நிலை நிலவியது. அன்று முதல் இன்று வரை அரசுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் என்றால் 19 ஆயிரம் அரசு மருத்துவர்கள் தான் நம் முதல்வருக்கு முதலில் நினைவுக்கு வருவார்கள். இருப்பினும் இதுவரை அரசு மருத்துவர்கள் மீது நம் முதல்வரின் பார்வை விழவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. எதிர்பாராத விபத்துகள், இயற்கை பேரிடர் மட்டுமன்றி கள்ளச்சாராய இறப்புகள் வரைக்கும், பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக முதல்வர் நிவாரணம் வழங்குகின்றார்.

தீர்வு கிடைக்கவில்லை: ஆனால், கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு திமுக அரசு 10 காசு கூட நிவாரணம் தரவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது. அதுவும் குறிப்பாக மறைந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவி அரசு வேலை கேட்டு கண்ணீருடன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும் முதல்வரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. விளிம்பு நிலை மக்களை கூட முதல்வர் சந்திப்பதை பார்க்கிறோம். மகளிர் நலனில் முக்கியத்துவம் தரும் அரசு என சொல்கிறார்கள். ஆனால், இன்று வரை மறைந்த மருத்துவரின் மனைவியின் வேதனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

கொரோனாவை விட வலி: இதனால் வேறுவழியின்றி இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அரசு வேலை தரப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்ட பின்னரும், இதுவரை அரசு மனம் இரங்கவில்லை. உண்மையில் உங்களுக்கு கருணையே இல்லையா? அதுவும் கரோனா முதல் அலையின் போது பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. பேருந்துகள் ஓடவில்லை. அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. அத்தகைய கடினமான தருணத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசு எதையுமே செய்யவில்லை. கண்ணீர் விடும் இந்த குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை தராமல் வேறு யாருக்கு தரப் போகிறார்கள்? அதுவும் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தை இத்தனை ஆண்டுகளாக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது, உண்மையில் அந்த பொல்லாத கொரோனாவை விட வலிப்பதாக உள்ளது.

போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு அரசு வேலை தரப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், தன்னுடைய துறையில் கரோனாவின் போது பணியாற்றி, உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்துக்கு ஒரே ஒரு அரசு வேலை தருவதற்கு அமைச்சர் அக்கறை காட்டவில்லை.

இருப்பினும் மக்கள் உயிரை காப்பாற்ற போராடி மாண்ட மருத்துவரின் குடும்பம் தொடர்ந்து கண்ணீர் சிந்துவதை நம் முதல்வர் நிச்சயம் விரும்ப மாட்டார்கள் என நம்புகிறோம். மேலும் இந்த குடும்பத்துக்கு அரசு வேலை தருவது என்பது, ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கும் அங்கீகாரம் தருவதாக அமையும் என்பது நம் முதல்வருக்கு தெரியும்.

எனவே, வரும் 22 ம் தேதி, அரசு மருத்துவர் விவேகானந்தன் உயிரிழந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை, தமிழ்நாடு முதலமைச்சர் கைகளால் வழங்க வேண்டும்'' என டாக்டர் பெருமாள் பிள்ளை இவ்வாறு தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.