ETV Bharat / state

வத்தலக்குண்டு அருகே 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் மீட்பு -கூகுள் மேப்பை நம்பியதால் பாதை மாறிய பயணம்!

வத்தலக்குண்டு அருகே 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் பத்திரமாக மீட்கப்பட்டார். கூகுள் மேப்பை நம்பியதால் பாதை மாறி பயணித்தபோது சேற்றில் சிக்க நேர்ந்துள்ளது.

ஐயப்ப பக்தர் மீட்பு
ஐயப்ப பக்தர் மீட்பு (Image credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி பாதை மாறி 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில் மாற்றுத் திறனாளி ஐயப்ப பக்தர் ஒருவர் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டுறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி போலீசார் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்டனர்

குறுக்குப் பாதையில் செல்ல கூகுள் மேப் உதவிய நாடினார்:போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியைச் சேர்ந்த பரசுராமர் என்ற மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் என்றும் தனது மூன்று சக்கர இருசக்கர வாகனத்தில் சபரிமலை சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்த போது தான் செல்லும் பாதையில் தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து குறுக்குப் பாதையில் செல்வதற்காக கூகுள் மேப்பை அவர் பயன்படுத்தியுள்ளதால் பாதை மாறியதும் தெரியவந்தது.

நேற்று இரவு 7 மணிக்கு வத்தலக்குண்டுவை அடுத்துள்ள எம்.வாடிப்பட்டி பகுதிக்குள் சென்றவர் தேசிய நெடுஞ்சாலையை தொடும் சாலையை தவற விட்டுவிட்டு சமுத்திரம் கண்மாய்க்கு செல்லும் சாலையில் சென்றுள்ளார். அங்குள்ள பாலத்தைக் கடந்தவர் எதிர்பாராத விதமாக கண்மாய் பகுதியில் இருந்த சேற்றில் வசமாக சிக்கி உள்ளார். இரவு நேரம் என்பதாலும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும் உதவிக்கு யாரும் வரவில்லை .

திண்டுக்கல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொன்ன கர்நாடகா போலீசார்: இதனைத் தொடர்ந்து சுமார் 7மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த பரசுராமர் கர்நாடகா காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். கர்நாடகாவில் இருந்து திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நள்ளிரவு 2 மணிக்கு ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்டு உள்ளனர்

மீட்கப்பட்ட ஐயப்ப பக்தரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்த போலீசார் அவருக்கு உணவு வழங்கினர் இன்று காலை சேற்றில் சிக்கிய மூன்று சக்கர வாகனத்தை மீட்ட போலீசார் ஐயப்ப பக்தரை சொந்த ஊருக்கு பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தனர்
இதனிடையே விரைந்து செயல்பட்ட தமிழ்நாடு போலீசாருக்கு கர்நாடகா போலீசார் பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்தனர்

பத்திரமாக மீட்பு: இது குறித்து வத்தலகுண்டு போலீசாரிடம் கேட்டபோது: "ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு வத்தலக்குண்டு வழியே கர்நாடகா நோக்கி சென்ற ஐயப்ப பக்தர் வத்தலகுண்டு பகுதியில் கூகுள் மேப்பை பார்த்து குறுக்கு வழியில் செல்வதற்காக முயற்சி செய்துபோது சகதியில் சிக்கி உள்ளார். இது குறித்து அந்த மாற்றுத்திறனாளி ஐய்யப்ப பகதர் கர்நாடகாவில் உள்ள பெங்களூர் போலீசாருக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திண்டுக்கலில் இருந்து வாக்கி டாக்கி வழியாக எங்களுக்கு அலர்ட் செய்யப்பட்டது. இரவு நேரத்தில் ரோந்து பணியில் இருந்ததால் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்றோம். உடனடியாக அவரை மீட்டு வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். பிறகு காலையில் சென்று அவரது மூன்று சக்கர வாகனத்தையும் எடுத்து வந்து அவரிடம் கொடுத்து அனுப்பி அவரது ஊருக்கு அனுப்பி வைத்தோம்,"என்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.