தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழிகாட்டுக் கொள்கை கொண்டுவரப்படுகிறது. இந்த வழிகாட்டுக் கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில், ஆயத்த ஆடை பணியாளர்கள், நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஏழாயிரத்து 400 ஆயத்த ஆடை நிறுவனங்களிலும் நூற்பாலைகளில் 10 லட்சம் பேர் பணியாற்றிவருகின்றனர். அதில் 85 விழுக்காடு பெண் ஊழியர்களே அதிகம் உள்ளனர்.
இவர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்தல், ஊதியம், ஓய்வூதியம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கருத்து கேட்கப்பட்டு கொள்கை உருவாக்கப்பட உள்ளதாக மகளிர் ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.