உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் கோவையிலிருந்து பெங்களூர் வரை செல்லும் ’உதய் எக்ஸ்பிரஸ்’ இன்று பெண்களால் இயக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே சார்பாக மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையிலும் பெண்களை கவுரவிக்கும் வகையிலும் இன்று தொடர்வண்டி இயக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தொடர்வண்டியின் ஓட்டுநர், பாதுகாப்பாளர், டிக்கெட் பரிசோதகர் என அனைவரும் மகளிராக இருந்தனர்.
ரயில் புறப்படும் முன்பாக கோட்ட மேலாளர் அனைவருக்கும் மலர்ச்செண்டு கொடுத்து மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், கோவை மாவட்ட ரயில்வே அலுவலர்களும் இப்பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து ஊக்குவித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் நடைபயணம்!