ETV Bharat / state

சாலையின் நடுவே தற்கொலை செய்துகொண்ட பெண் - Coimbatore crime news

பட்டப்பகலில் பெண் ஒருவர் சாலையின் நடுவே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தற்கொலை
மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தற்கொலை
author img

By

Published : Dec 16, 2021, 1:51 PM IST

Updated : Dec 16, 2021, 1:59 PM IST

திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் வசித்துவருபவர் தெய்வானை (45). தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவரின் கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்துவருகிறார்.

இந்நிலையில் பனியன் நிறுவனத்தில் வேலைசெய்யும் தெய்வானைக்கும், உடன் பணியாற்றியவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தெய்வானை தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த நபரை வற்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.அதற்கு அந்த நபர் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது எனக் கூறி தெய்வானைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதை ஏற்க மறுத்த தெய்வானை தன்னை அந்த நபருடன் சேர்த்துவைக்குமாறு திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

இதனால் விரக்தியில் இருந்த தெய்வானை கே.வி.பி. நகரில், சாலையின் நடுவே நின்றுகொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து திருப்பூர் மத்திய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் தெய்வானை மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்துக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மேம்பாலத்திலிருந்து குதித்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

Last Updated : Dec 16, 2021, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.