பொள்ளாச்சி அடுத்த திவான்சாபுதூரைச் சேர்ந்தவர் மாணிக்கம். அவரது மனைவி பழனாள். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். மேலும் மது குடிக்கும் பழக்கம் இருவருக்கும் இருந்துள்ள நிலையில், இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போதை தலைக்கேறிய மாணிக்கம், மனைவி பழனாளை அடித்து உதைத்துள்ளார். அப்போது பழனாளின் தலை சுவற்றில் மோதியதால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் பழனாளை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மேல் சிகிச்சைக்காக கோவை செல்லும் வழியில் பழனாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மனைவி உயிரிழந்ததை கேள்விபட்டு தலைமறைவாகியிருந்த கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கோவை அருகே விபத்து... மூதாட்டி உயிரிழப்பு!