கோயம்புத்தூர்: வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை பெண் ஒருவர் செல்லமாக வெளியே செல்லும்படி கூறுகிறார். அதன்படி அந்த பாம்பும் படம் எடுத்தவாறு பின்னோக்கி நகர்ந்து செல்கிறது.
அந்த காணொலியில், "நல்ல பிள்ளையா வெளியே போயிரு சாமி. உன்னோட கோயிலுக்கு வந்து மறக்காம பால் ஊத்துறேன். யார் கண்ணுலயும் படக் கூடாது தங்கம்" என்கிறார்.
அப்பெண் அப்படி பேசும் போது நல்ல பாம்பு படம் எடுத்தவாறு பின்னோக்கி நகர்ந்து சென்றது. தற்போது இந்த காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: காளை மாட்டுக்கு செயற்கை கால் பொருத்திய அரசு கால்நடை மருத்துவர்கள் - குவியும் பாராட்டு